தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2. சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு


 • பாடம் - 2


  C03132 சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  Audio Button

  காப்பியங்களைப் பேரிலக்கியம் அல்லது பெரிய இலக்கியம் எனக் கூறுவர். அவற்றைவிட அளவில் சிறியதாகவும், சில செய்திகளைக் கூறுவதாகவும் இருப்பன சிற்றிலக்கியம் எனப்படும்.

  சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி என்பன பேரிலக்கியங்கள். திருக்கோவையார், மூவருலா, மதுரைக் கலம்பகம், அற்புதத் திருவந்தாதி, தமிழ்விடுதூது ஆகியன சிற்றிலக்கியங்கள்.

  பேரிலக்கியங்கள் என்பவை இக்கால நாவல்களைப் போன்றவை; சிற்றிலக்கியங்கள் என்பவை இக்காலச் சிறுகதைகளைப் போன்றவை.

  சிற்றிலக்கியங்கள் என்ன வகையான பண்பாட்டைக் காட்டுகின்றன? இங்குக் காணலாமே!

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சிற்றிலக்கியங்களின் வகைகள் மற்றும் அவற்றின் பண்புகளை அறியலாம்.

  • சிற்றிலக்கியக் காலத்தின் சமூக நிலை, சமய நிலை, தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

  • சிறு தெய்வ வழிபாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:01:51(இந்திய நேரம்)