தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6. தமிழர் பண்பாட்டின் மொத்த உரு- கூட்டல்கள், கழித்தல்கள், மாற்றங்கள், நிலைபேறுகள்

 • பாடம் - 6

  C03136 தமிழர் பண்பாட்டின் மொத்த உரு -
  கூட்டல்கள், கழித்தல்கள், மாற்றங்கள்,
  நிலைபேறுகள்

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  Audio Button

  தமிழர் பண்பாட்டில் கழிந்தன எவை, நிலைபேறாய் நின்றன எவை, வந்தன எவை, பிற பண்பாடுகளுக்குச் சென்றன எவை என்பவற்றை இப்பகுதி விளக்குகின்றது.

  தமிழர் பண்பாட்டின் வலிமை எது என்பதைக் காட்டுகின்றது.

  தமிழர் பண்பாட்டின் மெலிவு எது என்பதை உணர்த்துகிறது.

  இன்று தமிழர் பண்பாட்டின் நிலை யாது எனத் தெளிவுபடுத்துகின்றது.

  நாளை-எதிர்காலத்தில் தமிழர் பண்பாடு எப்படி இருக்கும் எனக் கணிக்கின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழர் பண்பாடு உருவான விதம் பற்றியறியலாம்.

  • அந்தப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அவற்றுக்கான காரணங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

  • பண்பாட்டு மாற்றத்துக்கு அந்நியர் படையெடுப்பும் ஆட்சியும் முக்கிய காரணங்கள் என்பதையும், புதிதாக வந்து கலந்த பண்பாட்டுக் கூறுகளில் நல்லனவும் தீயனவும் கலந்தே இருந்தன என்பதையும் இனம் காணலாம்.

  • இன்றைய நிலையில், பழைய பண்பாட்டுக் கூறுகள் மறைந்து விட்டன; புதிய பல வந்து கலந்துவிட்டன. என்றாலும், அடிப்படையான, நிலைபேறான (என்றும் மாறாத) சில கூறுகள் சிதையாமல் இருந்து வருகின்றன. வாயற்ற உயிர்களிடமும் கருணை காட்டும் அன்பு மனம் இன்னும் இருப்பதே தமிழர் பண்பாடு நிலைபெற்று இருப்பதற்கான காரணம் என்பதை யறிந்து மகிழலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:07:50(இந்திய நேரம்)