தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4. விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு

 • பாடம் - 4

  C03134 விடுதலை இயக்கம் வளர்த்த பண்பாடு

  இந்தப்பாடம் என்ன சொல்கிறது ?

  Audio Button

  இந்தியா பலப்பலப் பகுதிகளாகப் பல்வேறு அரசர்களால் ஆளப்பட்டது. சிறு சிறு பகுதிகளாகக் குறுநில மன்னர்களால் ஆளப்பட்ட நிலை மாறி ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பேரரசு பெரும்பகுதியை ஆளும் நிலை உருவாயிற்று. எனினும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஆட்சி செலுத்தியவர் ஆங்கிலேயரே! பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர் ஆகியோரை விட ஆங்கிலேயரே இந்தியாவைப் பேராதிக்கம் செய்வதில் வெற்றி கண்டனர். ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் செலுத்தினர். இந்த ஆட்சியை அகற்ற மாபெரும் தேசிய இயக்கமாகக் காங்கிரஸ் மலர்ந்தது. விடுதலைப் போர் காந்தியடிகளின் தலைமையில் அறநெறியில் நிகழ்ந்தது. தமிழகம் தன் பண்பாடு விளங்க இப்போரில் அரிய செயல்களை ஆற்றியது. அப்போர் நிகழ்வுகள், அதன் விளைவுகள் அவற்றின் வழிப் புலப்படும் பண்பாட்டை இப்பாடம் விளக்குகின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பல்வேறு அரசர்களாலும் குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டு வந்த நம் நாட்டை ஆங்கிலேயர் தம் ஆளுகையின் கீழ்க் கொண்டு வந்ததையும், அந்த அந்நிய ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்த வீரர்களைப் பற்றியும் அறியலாம்.

  • ஆயுதமேந்தி ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற நிலை மாறி, காந்தியடிகளின் தலைமையில், அந்நியத் துணி மறுப்பு, ஒத்துழையாமை ஆகிய வழிகளில் சுதந்திரப் போராட்டம் தொடர்ந்ததைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • உப்புக்கு வரி விதித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் பற்றியும், அதில் பங்கு கொண்டவர்களைப் பற்றியும் அறிந்து மகிழலாம்.

  • தமிழ்நாட்டில் பாரதியார், வ.உ.சி. போன்றவர்களும், பின்னாளில் திரு.வி.க., பெரியார் ஈ.வே.ரா. போன்றவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிடலாம்.

  • விடுதலைப் போரில் தமிழ்ப் பத்திரிகைகளின் பங்களிப்புக் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:04:41(இந்திய நேரம்)