Primary tabs
-
4.6 தொகுப்புரை
இருநூற்றாண்டுக் கால அடிமை வாழ்வு ஒரு பேரிருளை இந்தியாவில் உண்டாக்கிவிட்டது; தமிழகமும் இச்சிக்கலில் தவித்தது. இதனை அகற்ற நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இவ்விருளை அகற்றப் போராடினோர் ஆகியோரைப் பற்றி அறிமுக நிலையில் சில செய்திகள் கூறப்பட்டன. விடுதலை இயக்க வரலாறு மிகப் பெரியது; பல பரிமாணங்கள் கொண்டது. இவற்றைப் பல நூல்கள் வழியாக அறியலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. வ.உ.சிதம்பரனாரின் சிறை வாழ்வு பற்றிக் கூறுக.
2. திரு.வி.க. நடத்திய பத்திரிகைகள் யாவை?
3. வ.வே.சு. ஐயர் பற்றிக் குறிப்பு எழுதுக.
4. பெரியார் காங்கிரசுக்கு ஆற்றிய பணி குறித்துத் திரு.வி.க. கூறுவன யாவை?
5. சுதேசமித்திரனிலிருந்து பாரதி விலகக் காரணம் யாது?