தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3. ஐரோப்பியர் காலப் பண்பாடு

 • பாடம் - 3

  C03133 ஐரோப்பியர் காலப் பண்பாடு

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  Audio Button

  ஐரோப்பிய நாகரிகம் தமிழர்களைக் கவர்ந்த சூழலை இப்பாடம் விளக்குகின்றது; ஆங்கில மொழியின்மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மோகம் எந்த அளவுடையது என்பதையும் இப்பாடம் எடுத்துரைக்கின்றது. இந்தியப் பண்பாட்டுப் பின்னணியில் தமிழர் பண்பாடு கொண்டிருந்த சிறப்பு இயல்புகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஐரோப்பியப் பண்பாடு எந்த அளவு தமிழர் வாழ்க்கையில் கலந்து நின்றது என்பதையும் இப்பாடம் விளக்கமாகக் கூறுகின்றது. ஐரோப்பிய ஆட்சியை எதிர்த்துத் தோன்றிய விடுதலை இயக்கத்திற்குத் தமிழகம் செய்த பெருந்தொண்டையும் நினைவுபடுத்துகின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • ஐரோப்பியர் தமிழ்நாட்டுக்கு வந்ததையும், அவர்கள் இங்கே தங்களை நிலைநிறுத்திக் கொண்டதையும் அறியலாம்.

  • இந்திய நாட்டின் பொதுவான பண்பாடு, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான பண்பாடு ஆகியவற்றையும், வேற்றுப் பண்பாடுகள் உள்ளே நுழைந்ததையும், அதனால் தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட தீங்குகள் பற்றியும் அறியலாம்.

  • தீமையிலும் நன்மை விளைவது போல, அந்நியர் ஆட்சியில் உண்டான முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் இனம் காணலாம்.

  • இலக்கியத்திலும், சமூகத்திலும், பெண்களின் நிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:03:15(இந்திய நேரம்)