Primary tabs
-
4.0 பாட முன்னுரை
மதத்தாலும், மொழியாலும், இனத்தாலும், சாதியாலும் வெள்ளையர் இந்திய நாட்டைப் பிரித்தாள முயன்றனர். பல மதங்கள், பல பண்பாடுகள், பல மொழிகள் எனப் பாகுபட்டிருந்த இப் பெருநாட்டை ஓரணியில் யார் காண முடியும் என்ற வினா எழுந்தது. ஆங்கில ஆட்சியை எதிர்க்கவும், அகற்றவும் வலிவின்றி இந்திய நாடு இருந்தது.
என்று பாரதி வருந்திப் பாடுவது போல, இந்தியா என்ற பாரதம் தான் வளர்த்துக் கொண்ட பண்பாடு தேய்ந்து போகுமோ என்ற கவலை கொண்டது. நாட்டைப் பற்றிய கவலை, அதைக் காத்துப் பேண வேண்டும் என்று ஆர்வத்திற்கு வித்திட்டது. ஆர்வம் அந்நியரை எதிர்க்கின்ற வீரத்தையும் அனைவரையும் ஓரணியில் கொண்டு வருகின்ற சாதனையையும் நிகழ்த்தியது.