தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்-6.6 நிலைபேறானவை

  • 6.6 நிலைபேறானவை

    Audio Button


    tvu

    சுமைதாங்கிக் கல்

    tvu

    'ஆ உரிஞ்சு கல்'

    தமிழர் பண்பாட்டில் நிலை பேறானவை எவை? தமிழர் வாழ்க்கை ஒரு மையத்தைவிட்டு அதிகம் விலகவில்லை. அது எந்த மையம்? இதோ ஒரு சுமைதாங்கிக் கல் நிற்கிறது பாருங்கள்! எதற்கு? யாராவது சுமையோடு வருபவர்கள் இறக்கி வைத்து ஓய்வு கொள்ளவாம். இதோ ஒரு கல் நட்டு வைக்கப்பட்டுள்ளதே ஏன்? பசு மாடுகள் உடம்பில் தினவு ஏற்படும்போது உராய்ந்து கொள்ளவாம். இதற்கு ஆ உரிஞ்சு கல் என்று பெயராம். இதோ ஒருவர் கீற்றுப் பந்தலிட்டு நீரும் மோரும் வைத்துக் கொண்டு கோடை வெயிலில் உட்கார்ந்திருக்கிறாரே யாருக்காக? வழிப் போவோர்களுக்காகவாம். எறும்புகளின் புற்றில் ஒரு பெண் அரிசியைத் தூவுகிறாள் பாருங்கள்!

    உண்ணுமுன் ஒருத்தி காக்கையை ஏன் அழைக்கிறாள்? காக்கை உண்ட பிறகே உண்ண வேண்டுமாம். இப்படி அஃறிணை உயிர்களிலிருந்து உயர்திணை மனிதர்கள் வரையில் எல்லா உயிர்க்கும் 'தருமம்' செய்து வாழும் உள்ளம், வாழ்க்கையின் நிகழ்ச்சிகளில் அறம் அடிப்படையாகி உள்ள நிலை இதுவே தமிழ்ப் பண்பாட்டின் நிலைபேற்றுக்குக் காரணம்.

    எல்லார்க்கும் நல்லன செய்யவேண்டும். தீயவற்றை மறந்தும் செய்யக் கூடாது. தீமை பிறர் செய்து வருவதில்லை. அதற்கு நம் விதியே காரணம். நம் துன்பம், நம் நோய், நம் வறுமை இவற்றுக்கெல்லாம் யாரும் காரணமில்லை. நாமே, நம் விதியே, நம் முன்னை வினையே காரணம் என்று கருதும் மனம் யாருக்கு என்ன தீங்கு செய்ய முடியும்? இதுவும் பண்பாட்டின் நிலைபேற்றுக்கான காரணமே!

    பாலைப் பொழிந்துதரும் பாப்பா - அந்தப்
    பசுமிக நல்லதடி பாப்பா;
    வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
    மனிதர்க்குத் தோழனடி பாப்பா
    வண்டி இழுக்கும் நல்ல குதிரை - நெல்லு
    வயலில் உழுதுவரும் மாடு
    அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு - இவை
    ஆதரிக்க வேணுமடி பாப்பா.

    Audio Button

    என்று எளிய உயிர்களையும் சுற்றமாக்கி வாழும் பண்பாடு என்றும் நிலைபெற்ற பண்பாடாக இருப்பதில் என்ன வியப்பு?

புதுப்பிக்கபட்ட நாள் : 08-08-2017 10:11:24(இந்திய நேரம்)