Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
1.
தலைவன் தன்மீது கொண்டுள்ள காதலின் மேன்மையைத் தெரிவிக்கத் தலைவி தேர்ந்தெடுக்கும் மேன்மையான பொருள்கள் யாவை?
தாமரைத் தாது, சந்தனத் தாது, சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேன் கூடு ஆகியவை. தானும் அவனும் இணைந்த காதல், தாமரைத் தாதையும் சந்தனத் தாதையும் எடுத்துக் கலந்து சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேன்கூடு போன்றது என்கிறாள் தலைவி.