Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
வினைமுடித்தன்ன இனியோள் யார்? விளக்குக.
தலைவி. சொல்கிறவன் தலைவன். வினைமுடிப்பதற்காகத் தலைவியைப் பிரிந்து முன்பு துயருற்றிருந்த நிலையை நினைத்துப் பார்க்கும் தலைவன். வினைக்காகப் பிரிந்து செல்லத் தூண்டும் தன் நெஞ்சினிடம், ‘வினையை முடித்தால் என்ன மகிழ்ச்சி, இன்பம் கிட்டுமோ அதே போன்ற இனிமையை உடையவள் தலைவி. அவ்வாறிருக்கையில் அவளைப் பிரிந்து வினைமேல் செல்லவேண்டிய தேவை என்ன’ எனப் பேசுகிறான்.