Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - I
4.
கிளிகளின் களவை மயில்கள் அறியும் எனத் தோழி சொல்வதன் குறிப்பு யாது?
தினைக்கதிர்களைக் கிளிகள் கவர்ந்து செல்கின்றன. இக்களவு மயில்களுக்குத் தெரியும். கிளிகளோ தம் களவு யாருக்கும் தெரியாது என நினைத்துக் கொள்கின்றன. இந்த வருணனையைச் சொல்பவள் தோழி. தோழிக்குத் தெரியாது தனது களவுக்காதல் என்று நினைத்திருக்கிற தலைவிக்குத் தான் அதனை அறிந்திருப்பதைக் குறிப்பாக உணர்த்தவே இவ்வருணனையைத் தோழி கூறுகிறாள்.