Primary tabs
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
தலைவனின் இயக்கவேகம் கவிதை வடிவமைப்பின் மூலம் எவ்வாறு வெளிப்படுகிறது?
தலைவியைக் காண விரைந்து திரும்பும் தலைவனின் வேகத்தைக் கவிதையின் வடிவமைப்பே வெளிப்படுத்துகிறது.
இலையில் பிடவம் ஈர்மலர் அரும்பப்
புதலிவர் தளவம் பூங்கொடி அவிழப்
பொன்னெனக் கொன்றை மலர மணியெனப்
பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலஇவ்வடிகளில் அரும்ப, அவிழ, மலர, கஞல எனவரும் வினை எச்சங்களின் அடுக்குக் காரணமாகக் கவிதை நடையில் ஒருவேகம் அமைகிறது.