Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II2)மூதின் முல்லைத் துறையை விளக்கும் வெண்பாவின் பொருளை எழுதுக. யாவை?
பகைப்படை தன் நாட்டின்மீது எதிர்த்து வருதலைப் பொராதவளாய்த் தனது வீட்டின்முன் பூத்திருந்த முல்லைப் பூக்களைப் பறித்துத் தன் மகனுக்குக் காவல் முல்லையாகச் சூட்டி வீட்டிலிருந்த வேலினை வளைவு நிமிர்த்தி அவன் கையில் கொடுத்து, தன் முன்னோர் வீர மரணம் எய்தி நடுகல்லில் தெய்வமாக நிற்கும் மாட்சியை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுப்பாள் வீரத்தாய்.