Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I1)‘கைக்கிளை’ என்ற தொடரை விளக்குக.கைக்கிளை என்ற தொடருக்குச் சிறிய உறவு என்பது பொருள்; சிறிது காலமே நிற்கும் உறவு இது எனலாம். கை என்பதற்குத் தனிமை என்றும் பொருள் உண்டு. கைம்பெண் என்பதில் இப்பொருளைக் காணலாம். எனவே கை்கிளை என்பது தனித்த உறவு என்றும் பொருள்படும். ஆணோ, பெண்ணோ தாமே கொள்ளும் காதலைக் கைக்கிளை என்பர். கைக்கிளை ஒருதலைக்காமம் என்று நம்பி அகப்பொருள் விளக்குகிறது.