தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.5 தொகுப்புரை

    தொல்காப்பியர் காலத்தில் கைக்கிளை அகத்திணையாக இருந்து பின்னர்ப் புறத்திணையாக மாறியது. புறப்பொருள் வெண்பா மாலை ஆண்பால் கைக்கிளை, பெண்பால் கைக்கிளை என இரு பிரிவாகப் பகுத்து இத்திணையை விளக்குகிறது. ஆண்பால் கைக்கிளையில் ஒருதலையாகக் காதல் கொண்ட ஆணின் உணர்வுகள் பேசப்படுகின்றன. பெண்பால் கைக்கிளையில் ஒருதலையாகக் காதல் கொண்ட பெண்ணின் உணர்வுகள் பேசப்படுகின்றன. மரபில் ஏற்பட்ட மாற்றத்தையும் புறத்திணைகள் வளர்ந்ததன் காரணத்தையும் இதன்மூலம் அறியமுடியும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    பெண்பால் கூற்றாக வரும் நயத்தல் துறையின் கொளுப்பொருளைக் கூறுக.
    2.
    மெலிவொடு வைகல் என்ற துறைக்கான வெண்பாவின் கருத்தைப் புலப்படுத்துக.
    3.
    காண்டல் வலித்தல் என்பதன் பொருள் யாது?
    4.
    கனவில் அரற்றல் என்ற துறைக்குரிய கொளுவினை எடுத்துக்காட்டுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 10:30:19(இந்திய நேரம்)