Primary tabs
- 
 தன் மதிப்பீடு : விடைகள் - II2)
 மெலிவொடு வைகல் என்ற துறைக்கான வெண்பாவின் கருத்தைப் புலப்படுத்துக.‘பிறை நிலவை ஒத்த நெற்றியானது பீர்க்கம்பூப் போல் பசலைநிறம் கொள்ள, கைகளிலுள்ள வளையல் கழன்று ஓட, கட்டுப்பாடு என்னும் தெப்பத்தால் காமம் என்கிற பெரிய கடலைக் கடந்தேன்; ஆயினும் ஆசை என்னும் நெருப்பு என் நெஞ்சை எரிக்கிறதே’. 
 
 
						 
						
