தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஒழிபியல் - 2

 • பாடம் - 6

  D03126 ஒழிபியல் - 2

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

      இந்தப் பாடம் யாப்பருங்கலக் காரிகை ஒழிபியலின் பிற்பகுதியில் சொல்லப்பெற்றுள்ள இலக்கணக் கருத்துகளை விளக்குகிறது. எதுகை, மோனை தொடர்பான புறனடைகளை விரிவாக விளக்குகிறது. தரவு,தாழிசை எனும் கலியுறுப்புகளின் அடிவரையறைகளை எடுத்துரைக்கிறது. கூன், வகையுளி போன்ற புதிய செய்திகளை விளக்குகிறது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • இப்பாடத்தில் சொல்லப்     பெற்றுள்ள     புறனடை இலக்கணங்களைப் படித்து அறிந்து கொள்ளும் போது, யாப்பிலக்கணம் கடுமையானதன்று,     நெகிழ்ச்சிப் போக்குகளையும் உடையது என்று புரிந்து கொள்ளலாம்.

  • ஓசை, யாப்புக்கு அடிப்படைதான் எனினும் அவ்வோசை உறுப்பியல் இலக்கணங்கள் தாண்டி விரிந்து செல்லும் பெரும்பான்மைப் போக்கைப் புரிந்து கொள்ளலாம்.

  • யாப்பு இலக்கண அறிவில் ஐயங்கள் நீங்கிய ஒரு முழுமையைப் பெறலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 16:56:07(இந்திய நேரம்)