தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாக்கள் - 2

 • பாடம் - 2

  D03122 பாக்கள் - 2

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா எனும் பாக்களின் அடியும் ஓசையும் பற்றி முதலில் விளக்குகிறது. பின்னர் மேற்குறித்த பா ஒவ்வொன்றின் பொது இலக்கணத்தையும், வகைகளையும் எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறது. அவ்விலக் கணங்களைக் கூறும் நூற்பாக்களும் அவற்றின் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • கலிப்பாவின் துள்ளல் ஓசைச் சிறப்புக்குக் காரணம் பல்வேறு இனிய ஓசையமைப்புகளையுடைய உறுப்புகளால் அது உருவாகியிருப்பதே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

  • வெண்கலிப்பாவுக்கும் கலிவெண்பாவுக்கும் இடையேயுள்ள நுட்ப வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளலாம்.

  • மருட்பா (கலப்புப் பா) வின் பெயர்க்காரணம் தெரிந்து கொள்ளலாம். வகைப்படுத்தலில் ஏனைய பாக்களிலிருந்து மருட்பா முற்றிலும்  வேறுபட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 16:14:52(இந்திய நேரம்)