தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்

  • 2.4 வஞ்சிப்பாவின் பொது இலக்கணம்

    • சீர்

    வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனிச்சீர்களால் ஆயது வஞ்சிப்பா. சிறுபான்மை காய்ச்சீர்களும் கலந்து வரலாம்.

    • தளை

    ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மை பிறதளைகளும் வரலாம்.

    • அடி

    வஞ்சிப்பாவிற்குரிய அடி குறளடியும் சிந்தடியும் ஆகும். அதாவது ஒரு வஞ்சிப்பா முழுமையும் குறளடிகளாய் வரும் ; அல்லது சிந்தடிகளாய் வரும். வஞ்சிப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி ;பெருமைக்கு வரம்பு இல்லை. வஞ்சிப்பா இரண்டடியாலும் வரும் என மயேச்சுரர் என்னும் இலக்கண ஆசிரியர் கூறினார்.

    • ஓசை

    வஞ்சியடிகளின் இறுதியில் ஒரு தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் கொண்டு வஞ்சிப்பா முடிவடையும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 11:57:45(இந்திய நேரம்)