Primary tabs
-
பாடம் - 4
D03124 பாவினம் - 2இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றின் இனங்களுக்குரிய இலக்கணங்களை விளக்குகிறது. அவற்றின் அடி அமைப்பு, அடி எண்ணிக்கை, ஓசை ஒழுங்கு ஆகியவற்றைத் தெளிவுபடுத்துகிறது. பா வகைகளுடன் அவற்றுக்குள்ள மேலோட்ட ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
இந்தப் பாடத்தை இதன் முந்தைய பாடமான பாவினம்- 1 என்பதுடன் இணைத்துப் பார்ப்பதன் மூலம் பாவினங்களின் பல்வேறு வகைப்பட்ட ஓசைச் சிறப்புகளை உணர்ந்து கொள்ளலாம்.
-
பக்தி இலக்கியங்கள், பெருங்காப்பியங்கள் போன்ற பெரும்பாலான தமிழ் இலக்கியங்களில் பா வகைகளை விடப் பா இனங்கள் பெருவழக்குப் பெற்றிருப்பதற்கான காரணம், உணர்ச்சி வேறுபாடுகளை உணர்த்துவதற்கேற்ப அமைந்துள்ள அவற்றின் எண்ணற்ற ஓசை விகற்பங்களே என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
-