தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 4.3 தொகுப்புரை மாணவர்களே!

    பாவினம்- 2 எனும் இப்பாடத்தில் கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவற்றின் இனங்களுக்குரிய இலக்கணங்களைத் தெளிவாக அறிந்து கொண்டீர்கள். கலி, வஞ்சி ஆகிய பாக்களுக்கும் அவற்றின் இனங்களுக்கும் இடையேயுள்ள மேலோட்ட ஒற்றுமைகள் யாவை எனப் புரிந்து கொண்டீர்கள். யாப்பருங்கலக் காரிகையில் சொல்லப்படாத, ஆனால் அதன் நூற்பாக்களின் யாப்பாகிய கட்டளைக்கலித்துறையின் இலக்கணத்தை விளக்கமாகத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். பாவினம்- 1 என்னும் முந்தைய பாடத்தை மீண்டும் படித்துப் பாருங்கள் எல்லாப் பாக்களுக்கும் உரிய தாழிசை இனங்கள் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும் ஒற்றுமையை உணர்வீர்கள். அதே போல நான்கு பாக்களின் விருத்தங்களும் சிறந்த ஓசை ஒழுங்கு பெற்றிருப்பதைக் காண்பீர்கள். அடுத்து வரும் பாடங்களில் ஒழிபியல் இலக்கணம் காண்போம்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    வஞ்சிப்பாவின் இனங்கள் யாவை?
    2.
    வஞ்சித் தாழிசை எவ்வடியால் வரும்?
    3.
    வஞ்சித் துறையின் அடி யாது?
    4.
    வஞ்சி விருத்தம் எவ்வடியால் வரும்?
    5.
    வஞ்சித் தாழிசை தனியே வருமா?
    6.
    வஞ்சித் துறையின் ஓசை அமைப்புப் பற்றிக் கூறுக.
    7.
    வஞ்சி விருத்தத்தின் ஓசை அமைப்பு ஒரே தன்மையினதா?
    8.
    வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் வேறுபாடு என்ன?
    9.
    வஞ்சித் தாழிசை, வஞ்சித் துறை ஒற்றுமை வேற்றுமை தருக.
    10.
    வஞ்சிப்பா எவ்வாறு முடியும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 11:07:57(இந்திய நேரம்)