தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாவினம் - 1

 • பாடம் - 3

  D03123 பாவினம் - 1

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

       பா இனம் என்று சொல்லப்படுகின்ற தாழிசை, துறை, விருத்தம் என்னும் யாப்புகளின் இலக்கணம் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளது. வெண்பாவின்     இனங்களும் ஆசிரியப்பாவின் இனங்களும் மட்டுமே இப்பாடத்தில் தரப்பட்டுள்ளன. பா வகைகளும் பா இனங்களும் வேறு வேறு என்ற தெளிவுடன் இப்பாடக் கருத்துகளை அணுகவேண்டும் என்ற இன்றியமையாத முன் குறிப்புத் தரப்பட்டுள்ளது. பா இனங்கள் அவ்வப் பாக்களோடு கொண்டுள்ள மேலோட்ட ஒப்புமைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.     

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

            பா வகைகளான வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்பவற்றுடன் தமிழ் யாப்பு முடிவுற்று விடவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். சிலப்பதிகாரம் தொடங்கிப் பாரதிதாசன் வரையிலும் அதற்குப் பின்பும் ஆசிரியவிருத்தம் என்னும் பா இனம் செல்வாக்குப் பெற்று வளர்ந்திருப்பதைப்     புரிந்து     கொள்வீர்கள். கம்பராமாயணம், சீவகசிந்தாமணி போன்ற நூல்கள் எழுந்த காலகட்டங்களில் நால்வகைப் பாக்களைவிட மிகுதியாகப் புலவர்களின் கருவியாக இருந்தவை விருத்தங்களே என உணர்ந்து கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 15:35:30(இந்திய நேரம்)