தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.4 தொகுப்புரை

    மாணவர்களே ! இந்தப் பாடத்தில் பாக்களின் வகைகளுக்கும் பாக்களின் இனங்களுக்கும் இடையே அடிப்படையான இலக்கண ஒற்றுமைகள் இல்லை;மேலோட்டமான சில தோற்ற ஒற்றுமைகள் கொண்டே ஓர் இனம் ஒரு குறிப்பிட்ட பாவுக்குரிய இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வெண்பா இனங்களுள் குறள் வெண்பாவின் இனமும் பிறவெண்பாக்களின் இனமும் தனித்தனியாக வகைப்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டீர்கள். அனைத்துப் பாக்களுக்கும் தாழிசை, துறை, விருத்தம் என இனம் மூன்றாக வகைப்படுத்தப் பட்டுள்ளதனை அறிந்துகொண்டீர்கள்.தமிழ் இலக்கியத்தில் ஆசிரிய விருத்தம் என்னும் இனம் பெருவழக்கில் இருப்பதைத் தெரிந்து கொண்டீர்கள்.தாழிசைகள் இனிய ஓசையுடையவை என்பதையும் விருத்தங்கள் குறிப்பிட்ட சில சந்த ஒழுங்குகளில் அமைவன என்பதையும் உதாரணப் பாடல்களின் துணைகொண்டு உணர்ந்து கொண்டீர்கள். அடுத்துவரும் பாடத்தில் (பாவினங்கள் - 2) கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களின் இனங்கள் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - Il
    1.
    ஆசிரியப் பாவின் இனங்கள் யாவை?
    2.
      ஆசிரியத் தாழிசையின் அடி எண்ணிக்கை யாது?
    3.
    ‘கன்று குணிலா....’ எனத் தொடங்கும் பாடல் எவ்வினத்தைச் சார்ந்தது?
    4.
    ஈற்றயலடி குறைந்து வரும் ஆசிரியப்பா இனம் எது?
    5.
    இடைமடக்கு என்றால் என்ன?
    6.
    ஆசிரியத் துறை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    7.
      பெருங்காப்பியங்களில் அதிகம் இடம்பெறும் பாவினம் யாது?
    8.
    ஆசிரிய விருத்தம் எவ்வடிகளால் ஆகியது?
    9.
    சிறப்பான ஆசிரிய விருத்தம் என எவற்றைக் குறிப்பிடலாம்?
    10.
    ஆசிரிய விருத்தத்தின் எதுகை அமைப்பைச் சுட்டிக் காட்டுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2017 18:15:02(இந்திய நேரம்)