தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.7 தொகுப்புரை

    தண்டியலங்காரத்தின் முப்பகுதிகளில் முதல்பகுதி பொதுவணியியல் ஆகும். இது சொல்லணி. பொருளணிகளுக்குப் பொதுவானது. செய்யுள் வகைகளையும், செய்யுள் நெறிகளையும் உரைப்பது.

    செய்யுள் நால்வகைப்படும். தனியே நின்று பொருளும் தொடரும் முடிவது முத்தகச் செய்யுள். பல செய்யுள்கள் தொடர்ந்து நின்று சொற்றொடர் முடிவு பெறுவது குளகச் செய்யுள். பொருள், இடம், காலம் போன்றவற்றால் தொகுக்கப் பெறுவது தொகைநிலைச் செய்யுள். சொல்லாலோ, பொருளாலோ செய்யுள்கள் தொடர்ந்து அமையப் பெறும் அந்தாதி, காப்பியம் போன்றன தொடர்நிலைச் செய்யுள் ஆகும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    தொகைநிலைச் செய்யுள் என்பது யாது?
    2.
    தொகைநிலைச் செய்யுள் வகைகளை எழுதுக.
    3.
    பொருள்தொடர்ச் செய்யுள் நூல்கள் இரண்டு கூறுக.
    4.
    அந்தாதி என்றால் என்ன?
    5.
    பொருளால் தொகுக்கப்பட்ட நூல்களுக்கு இரண்டு சான்று தருக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 19:06:52(இந்திய நேரம்)