தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thandiyalankaram-செய்யுள் நெறி - வைதருப்பம் (இரண்டாம் பகுதி)

  • பாடம் - 5
    D03135 செய்யுள் நெறி - வைதருப்பம் (இரண்டாம் பகுதி)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    வைதருப்ப நெறியின் உதாரம், உய்த்தல்இல் பொருண்மை, காந்தம் பற்றி விவரிக்கின்றது. வைதருப்பத்தின் வலி, சமாதி ஆகிய குணப் பாங்குகளை விளக்குகின்றது. வைதருப்பத்தின் பின் ஐந்து குணங்களைக் கௌட நெறியுடன் ஒப்பிட்டு உரைக்கின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    செய்யுளில் குறிப்பினால் வேறொரு பொருள் உணர்த்தப்படும் பாங்கினை அறிந்து கொள்ளலாம்.
    செய்யுளுக்குப் பொருள் காணும்பொழுது உருபு விரிக்கும் முறை குறித்துத் தெளிவு பெறலாம்.

    ஒருதிணைப் பொருள்களின் செயல்கள் வேறு திணைப் பொருள்களின் மேல் ஏற்றிக் கூறப் பெறுதல் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    செய்யுளில் அமையும் புகழ்ச்சிக்கான எல்லையை உணர்ந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:48:52(இந்திய நேரம்)