தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வைதருப்பமும் கௌடமும்

 • 5.6 வைதருப்பமும் கௌடமும்

  செய்யுள்நெறியின் இருபெரும் வகைகளாக உள்ள வைதருப்பம், கௌடம் ஆகிய இரண்டும் தம்முள் ஒற்றுமையும் வேற்றுமையும் ஒருங்கு கொண்டு விளங்குகின்றன.

  ஒற்றுமைக் கூறுகளாக உள்ள குணங்கள் ஒழுகிசை, பொருளின்பம், உதாரம், சமாதி ஆகியனவாகும்.

  வேற்றுமைக் கூறுகளாவன :

  வ.எண்
  வைதருப்பம்
  கௌடம்
  1)
  செறிவு முதலான பத்துக் குணங்களை உடையது.
  பத்துக் குணங்களுள் சில ஏற்கும்.
  2)
  வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூவினத்தாலும் அமைந்த பாடலுடையது.
  ஓரின எழுத்துகளால் ஆன பாடல் உடையது.
  3)
  பொருள் எளிதில் விளங்க வேண்டும்.
  பொருள் எளிமையுடன் நயமும் வேண்டும்.
  4)
  மோனைகள், தொகைகள் ஓரளவே போதுமானது.
  மோனைகள், தொகைகள் மிகுதியும் தேவை.
  5)
  உலகியல் நெறிக்கேற்பப் புகழுரை அமைதல் வேண்டும்.
  உலகியலுக்கு அப்பாற்பட்டும் கற்பனை வளம் பெருகிடும் புகழுரை அமையலாம்.
  6)
  உய்த்தல்இல் பொருண்மை காணுதல்.
  உய்த்தல் பொருண்மை காணுதல்.

  இவ்வாறு இருவகைச் செய்யுள் நெறிகளும் தமக்குள் தொடர்பு கொண்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 11:33:10(இந்திய நேரம்)