தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொற்பொருளியல் - இரு அணுகுமுறைகள்

  • 1.4 சொற்பொருளியல் - இரு அணுகுமுறைகள்

    சொற்பொருளியலை ஆயும் போது இரு அணுகுமுறைகளைப் பின்பற்றலாம்.

    1. குறிப்பு அணுகுமுறை (Referential Approach)

    2. செயற்பாட்டு அணுகுமுறை (Operational Approach)

    1.4.1 குறிப்பு அணுகுமுறை

    ஒரு சொல் தான் உணர்த்தும் பொருளைக் குறிப்பாக வெளிப்படுத்துவது குறிப்பு அணுகுமுறை என்பதாகும்.

    குறிப்பு அணுகுமுறைக்கு ஆக்டன் (Ogden), ரிச்சர்ட்ஸ் (Richards) ஆகிய இருவரால் படைக்கப்பட்ட முக்கோணம் உரிய சான்றாக விளங்கும்.

    1.4.2 செயற்பாட்டு அணுகுமுறை

    செயற்பாட்டு அணுகுமுறையில் சொல்லினுடைய பொருள் யாது? என்பதைப் பற்றிய விளக்கம் தேவையில்லை. அச்சொல்லினுடைய உண்மையான பொருள் என்பது, அதைப் பயன்படுத்துபவரைப் பொறுத்தே அமைவதை இவ் அணுகுமுறை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, ஒரு சொல்லின் பொருள் என்பது பயன்பாடே ஆகும் (The meaning of a word is its use in the language) என்று கூறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 11:14:12(இந்திய நேரம்)