தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை சொற்பொருளியல் குறித்துப் பல செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    • சொற்பொருளுக்குரிய     பல்வேறு     விளக்கங்களையும், சொற்பொருள் குறித்துத் தமிழ் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளையும் அறிந்து கொண்டீர்கள்.
    • வழங்கும் சொல்லுக்கும், அச்சொல் உணர்த்தும் பொருளுக்கும் உள்ள தொடர்பு நிலையையும், மொழி பண்பாட்டோடு தொடர்புடைய கூறு என்பதற்கான விளக்கங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டீர்கள்.
    • சொற்பொருளியல் குறித்த அணுகுமுறைகளையும், சொற் பொருளியலின் பல்வேறு வகைப்பாடுகளையும், பற்பல சான்றுகளின்     மூலம் நீங்கள் நன்கு உணர்ந்து கொண்டிருப்பீர்கள்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    சொற்பொருளியலின் இரு அணுகுமுறைகள் யாவை?
    2.
    குறிப்பு     அணுகுமுறை     முக்கோணத்தின் அமைப்பைக்காட்டுக.
    3.
    சமூகக் கிளைமொழியின் இரு வழக்குகளைக் குறிப்பிடுக.
    4.
    பாமரின் (F.R. Palmer) சொற்பொருளியல் பாகுபாட்டினைக் குறிப்பிடுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 10:52:00(இந்திய நேரம்)