தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல் தன் சிறப்பியல்பைச் சுட்டல்

  • 3.3 சொல் தன் சிறப்பியல்பைச் சுட்டல்

    சொற்களினுடைய அடிப்படையான பொருள் மட்டுமன்றி, அதற்கும் மலோக, தம் சிறப்பியல்பைச் சுட்டும் பொருளையும் கொண்டனவாக விளங்கும்.

    அடிப்படையான பொருளைச் சுற்றிப் பலபொருட்கள் ஒளிந்திருக்கக் காணலாம். இவ் அடிப்படையான பொருட்களைக் கைமுதலாகக் கொண்டு, சுற்றியுள்ள பிற பொருளுக்குப் பெயரிட நேரிடும்போது வெளிப்படையாய்த் தோன்றும் குணங்களைக்கொண்டு ஒவ்வொரு பெயரையும் உருவாக்கி வந்தனர் நம் முன்னோர். இவ்வாறு வெளிப்படையாய்த்     தோன்றும் பொருள்களையே சிறப்பியல்புகள் எனலாம்.

    எ.கா:

    துழ - த்தல்

    துழ-த்தல் இச்சொல், உழ-வன் என்னும் அடியினின்று வருவது. உழன்று வரச் செய்தல் என்னும் பொருளில் வழங்கும். துழ என்னும் அடி உழன்று வரல என்னும் பொருளிலிருந்து சிறிது மாறி, உள்வாங்கி வரல், வளைந்து வரல், கூடல் என்னும் பொருட்களிலும் வழங்கும். ‘வளைந்து வரல்’ என்னும் குணம் அல்லது சிறப்பியல்பு, பல்பொருள் செயல்களுக்கு, துழ - என்னும் அடியை அடிப்படையாகக் கொண்டு புதுப்புதுப் பெயர்களை உருவாக்கியது.

    எ.கா:

    துழத்தல்

    சூழ்ந்துவரல் என்னும் பொருள்

    தொழுதி

    கூடி வருதல் (கூட்டம், திரள், இனம்)
    தோடு
    வேறொரு வகைக் கூட்டம்
    தொகுதி
    தொகை, தொகுத்தல்
    தொழு
    பசுக்கூட்டம்
    தொழுவம்
    பசுக்கூட்டம் வாழுமிடம்
    தொறு
    இடைச்சாதி

    தொறுவன், தொறுவி, தொறுத்தி

    இடையன்,இடைச்சி, இடைச்சி
    தொழுவர்
    உழுவோர் (பொருள் வளைந்தது)

    தொழுப்பு

    உழவு செய்தல்

    தொழில்

    முயற்சி (உழவே சிறந்த முயற்சியாகும்)

    தொழும்பு

    எத்தொழிலுக்கும் பொதுப்பெயர்

    தொழும்பர்

    தொழில் செய்வோர்

    துரும்பர்

    தமிழ்மக்களுள் ஓர் இனம்

    தொண்டு

    ஊழியம்

    தொண்டர்

    கடவுளை வணங்குவோர்

    தொழுதல்

    வணங்குதல் (வளைதல்)

    தொழுதல் என்னும் இச்சொல் அடிமைத்தொழில் செய்தல் என்னும் பொருளை உடையதாக இருப்பினும், கடவுளைத் தொழும் அளவில் உயர்வு பெற்றும் விளங்குகின்றது. இருந்தாலும், தொழுதூண் முதலிய சொற்களில் இழிவு பெற்றே வருகின்றது. இங்ஙனம் சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து அடிச்சொற்களைக் கொண்டு பல்வேறு பொருள்களுக்கும் பெயராக வழங்குகின்றன. இப்பொருட்களின் செயலின் சிறப்பியல்பைச் சுட்டலே பெயரிடும் வழக்கத்திற்கு வாயிலாக அமைந்தது எனலாம்.

    இருப்பினும் இச்சொற்பொருள் செயல்களின் சிறப்பியல்புகள், ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமாக, இப்பொருளைப் பயன்படுத்தும் பலரால் பலவகையாக உணரப்படும். அதனாலேயே ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு செயலினுக்கும் பல பெயர்கள் உண்டாயின. எனவே, ஒரு பொருள் பலசொல் என்று தமிழ் இலக்கணத்தில் சொல் பாகுபாடு உண்டானது.

    எ.கா. 1

    பன்றி -
    கேழல்
    புறப்பட்ட பல்
    நிலத்தைக் கிளைத்தல்

    எ.கா. 2

    அறிவு
    உணர்வு (உள்ளத்தில் கொள்வது)

    காட்சி (நோக்கித் தெளிவது)

    பிரித்துக் காண்பதாகிய அறிவு என்னும் சொல் பொதுவான சொல் எனும் நிலையையும், உணர்வு அவ் அறிவின் முதிர்ச்சியையும், காட்சி என்ற சொல் ஆராய்ந்து காணப்பெற்றமையையும் விளக்கும் சொற்களாகக் கொள்ளலாம்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    ‘கடகம்’ என்ற சொல்லுக்கும் ‘சாகை’ என்ற சொல்லுக்கும் இடையே உள்ள தொடர்பைப் புலப்படுத்துக.
    2.
    உருவம் ஒன்றாக     இருப்பினும்     அடிச்சொற்கள் வெவ்வேறாக இருத்தலுக்குச் சான்று தருக.
    3.
    ‘எழில்’ என்ற சொல் உணர்த்தும் எவையேனும் இரு பொருட்களைக் கூறுக.
    4.
    ‘அறிவு’ என்ற சொல்லோடு தொடர்புடைய இரு சொற்களைக் குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 08-11-2017 13:22:26(இந்திய நேரம்)