தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

போசளர் கோயில் ஓவியம்

  • 5.5 போசளர் கோயில் ஓவியம்

    ஸ்ரீரங்கத்திலுள்ள வேணுகோபால சுவாமி கோயில் போசளர் காலத்தில் எடுக்கப் பட்டது. இதனைப் போசள மன்னன் வீர ராமநாதன் கி.பி.13 ஆம் நூற்றாண்டில் கட்டியதாகக் கருதுவர். இக்கோயிலின் முகமண்டப விதானத்தில் போசளர் காலத்தது என்று கருதத் தக்க ஓவியம் உள்ளது. இதில் கண்ணன் குழலூதி நிற்கும் நிலையும் அதனைக் கேட்டு மயங்கி நிற்கும் மாடுகளின் நிலையும் காணப் படுகின்றன. கண்ணன் கோபியர் புடை சூழ விளங்கும் காட்சியும் இவ்வோவியத்தில் சித்திரிக்கப் பட்டுள்ளது. இவ்வோவியத்தில் காணப்படும் பெண்களின் சேலைக் கட்டும் ஆபரணங்களும் தமிழ்நாட்டிற்குப் புதுமையானவை. இவ்வோவியம் கர்நாடகப் பகுதி ஓவியங்களை நினைவூட்டுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 12:51:43(இந்திய நேரம்)