Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
2.கலை, கலைக்காகவே என்னும் வாதத்திற்கு நேர் எதிரான கொள்கை எது? அது முக்கியமாக என்ன சொல்கிறது?
கலை, கலைக்காகவே என்னும் வாதத்திற்கு நேர் எதிரான கொள்கை, பயன்பாட்டுக் கொள்கையாகும். கலை, பிரச்சாரத்துக்காகவே இருக்கிறது. நீதி சொல்லுவதற்காகவே இருக்கிறது என்பது இந்தக் கொள்கை. இது உருவம், அழகு, செய்ந்நேர்த்தி முதலியவற்றை அலட்சியப்படுத்துகிறது.