Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - II
1.‘கலை, கலைக்காகவே’ என்ற கொள்கை பற்றி ஏ.சி.பிராட்லி கூறுவது யாது?
கலை, ஒரு தனி உலகம். அதனை அனுபவிக்கத் தொடங்குகிற போது, புறவுலகு நினைவே சிறிதும் வரலாகாது. கற்பனையின் துணையுடன், கவிதை, சில அனுபவங்களை வெளியிடுகின்றது. அவ்றை நாமும் பகிர்ந்து கொள்ளலாமே தவிர, வேறு பயன் தேடக்கூடாது. அவ்வாறு தேடினால், கவிஞன் என்ன கருதி அதனை ஆக்கினானோ, அதனை நாம் இழந்துவிடுவோம். இன்ப அனுபவம் தவிர வேறுபிற எல்லாம் இரண்டாம் நிலையானவை. முக்கியமானவை அல்ல. கலையைக் கலைக்குள்ளிருந்து பார்; கலையாகப் பார்; வேறொன்றையும் பார்க்காதே.