தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 6.0 பாட முன்னுரை

         இலக்கியத் திறனாய்வு என்பது அறிவு சார்ந்த ஒருதுறை. அது தனக்குள் பல துறை இயல்களையும், பார்வைத் தளங்களையும் அணுகுமுறைகளும் கொண்டிருக்கிறது. அதாவது, திறனாய்வு, பல துறைகள் சார்ந்ததாகவும், அவற்றின் தாக்கங்களைப் பெற்றதாகவும் விளங்குகிறது.

         திறனாய்வுக்குக் களமாகவும் இலக்காகவும் இருப்பது எது? இலக்கியம்.

         திறனாய்வு பல துறைகளைச் சார்ந்திருக்கிறது என்றால், இலக்கியமும் அவ்வாறு சார்ந்திருக்கிறது என்று தானே பொருள். எனவே, இவை எவ்வாறு பிறதுறைகேளாடு சார்ந்திருக்கின்றன என்று பார்ப்பதன் மூலமாக இவற்றின் அடிப்படையான சில பண்புகளையும் நாம் அறிய வேண்டும்.

         இலக்கியம் தவிர்ந்த வேறு பிற கலைகேளா, கலைகள் அன்றி வேறு பிற துறைகேளா, திறனாய்விலோ இலக்கியத்திலோ அப்படியே படிந்திருக்கின்றன அல்லது பதிந்திருக்கின்றன என்று முடிவு பண்ணிவிடக் கூடாது. அவற்றின் சில பண்புகளும் சில செயல்முறைகளும் இவற்றில் மட்டுமே உள்ளன என்று சொல்வதே பொருந்தும். ‘திறனாய்வும் பிற துறைகளும்’ எனும் இந்தப் பாடத்தில் நாம் இது பற்றிப் பார்க்கலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:27:23(இந்திய நேரம்)