Primary tabs
-
பாடம் - 1
D06131 திறனாய்வும் உரை மரபும்
திறனாய்வின் வரலாற்றில் தமிழ் உரைகளின் மரபு என்பது யாது, அது எத்தகையது என்பது பற்றிப் பேசுகிறது. உரையின் விளக்கம் பற்றியும் வரையறை பற்றியும் கூறுகிறது.உரைகளுக்கும் திறனாய்வுக்கும் உள்ள உறவுகள் பற்றிச் சொல்கிறது. உரைகளின் முக்கியத்துவம், உரைகளின் பொதுவான வரலாறு ஆகியவற்றையும் எடுத்துச் சொல்கிறது.
உரைகளின் பகுப்பு, உரைகளின் வகைகள் பற்றிப் பேசுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
திறனாய்வு, திடீரென்று முளைத்தது அல்ல; அதற்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் முக்கியமான பணியை அறிந்துகொள்ளுவதற்கு இந்தப் பாடம் உதவுகிறது.
-
தமிழ் மரபில் உரைகளின் பங்கு, பணி, பண்பு முதலியன பற்றி அறிந்து கொள்ளலாம்.
-
வளரும் இலக்கியங்கள், காலம் என்ற அகன்ற பரப்பில் தகவல் இடைவெளி (communication gap) பெறக்கூடும்; உரைகள் அதனை அகற்றுகின்றன. இதனை நாம், இந்தப் பாடம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
-
உரை மரபினை அறிவதன் மூலம், தமிழ் இலக்கிய வளத்தினை அறிந்துகொள்ள முடியும்.
-