தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- இன்றைய திறனாய்வாளர்கள் - I

 • பாடம் - 4

  D06134 இன்றைய திறனாய்வாளர்கள்-I

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

           தமிழ்த் திறனாய்வு வரலாற்றில், இன்றைய திறனாய்வு எவ்வாறு தொடங்கி, தொடர்ந்து வளர்கிறது என்பது பற்றிச் சொல்கிறது. தொடக்க காலத் திறனாய்வாளர்கள் யார், எவர் என்பது பற்றிப் பேசுகிறது. செல்வக்கேசவராயர் முதற்கொண்டு மறைமலையடிகள்,     வ.வே.சு.ஐயர்     முதலியவர்களின் பங்களிப்பினைச் சொல்லுகிறது. பாரதியார், புதுமைப்பித்தன் முதலிய படைப்பாளர்கள், திறனாய்வாளர்களாக நின்றும் கருத்து உரைக்கிறார்கள் என்பதை விளக்குகிறது.     

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • இன்றைய காலச் சூழலில் திறனாய்வு பெற்றுள்ள வளர்ச்சியை அறிந்துகொள்ள முடிகிறது.
  • திறனாய்வாளர்களின்     இலக்கிய அறிவு சார்ந்த பின்புலங்கள், முக்கியமாக மூன்று எனக் கொண்டு, அவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
  • தொடக்க காலத் திறனாய்வாளர்கள் - அவர்களுள் முதலாமவர், தொடர்ந்து வந்த பிறர் - முதலிய செய்திகளை அறிந்துகொள்ளலாம்.
  • பாரதியார், புதுமைப்பித்தன், கு.ப.ராசகோபாலன் ஆகிய படைப்பாளிகள், திறனாய்வு மனநிலை கொண்டவர்களாக எவ்வாறு இருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
  • தமிழ்த் திறனாய்வு, இருபதாம் நூற்றாண்டின் எழுச்சியில், மிகச்சிறப்புடன் வளரவிருக்கிறது என்பதற்குரிய பூர்வாங்க (தொடக்க) நிலைகளை அறிந்துகொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:43:38(இந்திய நேரம்)