தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diploma Course - D06134-திறனாய்வும் ஆராய்ச்சியாளர்களும்

  • 4.3 திறனாய்வும் ஆராய்ச்சியாளர்களும்    

         ஆராய்ச்சி என்பது தருக்கமும் நுணுக்கமும் கொண்டது. மூல நூல்கள், சான்றாதாரங்கள் என்பவை ஆராய்ச்சிக்கு முக்கியம். முடிவுகளும் நோக்கங்களும் கருதுகோள்களும் காரணகாரியத் தொடர்புகளுடன் இருக்க வேண்டும்.     படைப்பினுடைய வாசகப்பரப்பையும்     படைப்பாக்க     முறைகளையும், உள்ளர்த்தங்களையும்     வெளிக்கொணர்வது     திறனாய்வுக்கு முதன்மையான தேவையாகும்.

         பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய தேவைகளையொட்டி நாடு, இனம், மொழி, இலக்கியம், பண்பாடு முதலியவற்றின் தேடுதல்களாக வந்தவை, முதலில் ஆராய்ச்சிகளேயாகும். ஆயினும் இவற்றில் பல, இலக்கியங்களை மையமிட்டே செய்யப்பட்டன. யாழ் விபுலானந்த அடிகள், பண்டித நடேச     சாஸ்திரியார், எஸ்.கிருஷ்ணசாமி     ஐயங்கார்,     மு.இராகவையங்கார், ரா.ராகவையங்கார்,கே.என். சிவராஜபிள்ளை, எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, வெ. கனகசபைப்பிள்ளை , எம். சீனிவாசஐயங்கார், பி.டி. சீனிவாச ஐயங்கார், கே. எஸ். சீனிவாச பிள்ளை, வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர், எல். டி. சாமிக்கண்ணுப்பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை     ஆகியவர்கள்     குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் இலக்கியங்களைத் திறனாய்வுக் கண்ணோட்டத்தோடு     அணுகினர். தமிழ் இலக்கியம் பற்றிய ஆழமான பரந்த அறிவும் மதிப்பீடுகளும் கருத்து நிலைகளும் இவர்களுடைய     நூல்களிலே     உண்டு. இவர்களைத் தொடர்ந்துதான் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.வி. சதாசிவ பண்டாரத்தார், தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், கலாநிதி கைலாசபதி முதலிய பலஆராய்ச்சியாளர்கள் தோன்றினர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:42:15(இந்திய நேரம்)