தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- இன்றைய திறனாய்வாளர்கள் - III

 • பாடம் - 6

  D06136 இன்றைய திறனாய்வாளர்கள்-III

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

      இந்தப் பாடம் முந்தைய இரண்டு பாடங்களின் தொடர்ச்சியாக, தமிழில் இன்றைய திறனாய்வாளர்கள் பற்றிப் பேசுகிறது.     தமிழில்     திறனாய்வாளர்கள் பலர் ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தார்கள் என்பது பற்றிக் கூறுகிறது. தனிப்பட்ட திறனாய்வாளர்களின் பங்களிப்புப் பற்றிப் பேசுகிறது. திறனாய்வின் வளர்ச்சியையும், பண்பு நிலைகளையும் சொல்கின்றது.

  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • திறனாய்வாளர்களின்     பணிகளையும் அவர்தம் முக்கியமான பங்களிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

  • தமிழில் திறனாய்வு பல போக்குகளையும் பல பரிமாணங்களையும் கொண்டது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

  • திறனாய்வாளர்களின் நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • இலக்கியத்தோடு     பொருத்திக் காட்டுவதற்கு நாட்டுப்புறவியல், வரலாறு, தத்துவம், சமூகவியல் முதலிய பல்துறைகளின்     ஒன்றிணைப்புப் பயன்பட்டுள்ளது என்பதைத் திறனாய்வாளர்களின் வழி அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:46:24(இந்திய நேரம்)