தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (1)

    கண்ணதாசன் உரைநடையின் தனித்தன்மைகள் இரண்டினை எடுத்துக் காட்டுகளுடன் எழுதுக.

    கண்ணதாசன் உரைநடையின் தனித்தன்மைகளில்
    (1) எதுகையும் மோனையும்,
    (2) உவமை நயமும் குறிப்பிடத்தக்கவை.

    1. எதுகையும் மோனையும்

    எதுகை:
    'மதுரை வீரன்' திரைப்படத்தில் பொம்மியின் வேதனை மொழிகள்.

    சுற்றிவரும் எதிரிகளைத்
    தூளாக்குவேன் என்று
    த்தி எடுத்த கைகளைப் பார்!
    த்த வெள்ளத்தில் மிதக்கும் அந்தச்
    சுத்த வீரனைப் பார்!

    மோனை:
    வெள்ளை நுரைகளைக் கரையில் ஒதுக்கியபடி
    விளையாடிக் கொண்டிருந்தது குமரியாறு
    பிடிப்பாரில்லாமல் பெருகிக் கிடந்த மீன்கள்
    லையை மேலே நீட்டித் வழ்ந்து கொண்டிருந்தன.

    மேலே அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளவை மோனைக்கும் எதுகைக்கும் அடையாளங்கள் ஆகும்.

    2. உவமை நயம்

    “கற்புடைய ஒரு பெண்ணைவிட அவள் அணிந்துவரும் நகைகள் விலையுயர்ந்தவை அல்ல. அழகான புள்ளிமானிடம் கவிஞன் கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர, மாமிசத்தை யல்ல” என்று வழங்கியிருக்கும் உவமைநயம் குறிப்பிடத் தக்கதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 14:44:55(இந்திய நேரம்)