Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - I
(5)
கோவி.மணிசேகரனின் உரைநடை வகையில் இரண்டை விளக்குக.
(1) செந்தமிழ் நடை, (2) வட்டார நடை(1) செந்தமிழ் நடை
செந்தமிழ் நடை என்பது பிறமொழிச் சொல் கலவாமல் எழுதுவதும், எழுத்து, சொல், தொடர் இலக்கணப் பிழையின்றி எழுதுவதும், இனிய தமிழில் எழுதுவதும் ஆகும். இவ்வகை நடைக்கு ஓர் எடுத்துக் காட்டு.
“அந்த நாள் வந்தது. அழகின் திருக்கோலம் பூண்ட வேலுநாச்சியின் ஆயுள் அன்றுடன் முடிவு பெற்றிருக்க வேண்டும். கரிய பெரிய வயிற்றுடனும் பயணமானானன்.”
(2) வட்டார வழக்கு நடை
கதைமாந்தர்கள் தமிழகத்தில் எந்த வட்டாரத்தில் வாழ்கிறார்களோ, அந்த வட்டாரத்தில் பேசப்படும் பேச்சு நடையை அமைத்துக் காட்டுவது வட்டார வழக்கு நடை எனப்படும். சென்னையின் வட்டார வழக்கு கோவி.மணிசேகரனுக்கு மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. இவ்வகை நடைக்கு ஓர் எடுத்துக் காட்டு.
“அம்மா காரு; பல்லாவரத்திலே ஒருநாள் கண்ணாலம் பண்ணிக்கிட்டு இருந்தேன் . . . . . . . பசுமாடு லாரியிலே அம்புட்டுச் செத்துப் போச்சு! ”