Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
(3)
கோவி.மணிசேகரனின் உரைநடையின் தனித்தன்மைகளில் இரண்டினை விளக்குக.
கோவி.மணிசேகரனின் உரைநடையின் தனித்தன்மைகளில் இரண்டு.(1) வருணனை நடை, (2) இழையோடும் நகைச்சுவை
(1) வருணனை நடை
வருணனை நடையில் கோவி.மணிசேகரனின் தனித்தன்மை புலப்படும். “மாலை மறைந்து மஞ்சள் இழந்து-இருளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த இரவு புலர்ந்தது” எனத் தொடங்கும் இரவு நேர வருணனையை இங்கு எடுத்துக் காட்டலாம்.
(2) இழையோடும் நகைச்சுவை
சென்னையில் பேருந்துகள் நினைத்த நேரத்திற்கு வருவதில்லை என்பதை இழையோடும் நகைச்சுவையுடன் கோவி.மணிசேகரன் தெரிவிக்கிறார். “நினைத்த நேரத்தில் வரக்கூடிய அலாவுதீன் பூதமா என்ன, மதராஸ் பஸ்கள்?” என்று வருமிடத்தை இங்குச் சுட்டிக் காட்டலாம்.