தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.1 கவிமணியின் பிறப்பும் வாழ்க்கையும்

  • 4.1 கவிமணியின் பிறப்பும் வாழ்க்கையும்
    கவிமணி தேசிகவிநாயகம்

    கவிமணி 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் தேரூர் சிவதாணு; தாய் ஆதிலெட்சுமி. முதலில் படித்தது மலையாளம். தேரூர் வாணந்திட்டு திருவாவடுதுறை ஆதீனம் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். திருவனந்தபுரம் மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். திருவனந்தபுரம் மகாராசா பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், திருவனந்தபுரம் மகாராசா பெண்கள் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

    4.1.1 கவிமணியின் படைப்புகள்

    இளமையிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். 1885இல் முதல் கவிதை நூல் அழகம்மை ஆசிரிய விருத்தம் எழுதப் பட்டது. மற்றைய நூல்கள்

    1) மருமக்கள்வழி மான்மியம்
    2) மலரும் மாலையும்
    3) ஆசிய ஜோதி
    4) உமர்கயாம் பாடல்கள்
    5) தேவியின் கீர்த்தனைகள்
    6) குழந்தைச் செல்வம்

    1)
    கவிமணி பிறந்த ஊர் எது?
    2)
    கவிமணியின் தந்தை பெயரைக் குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 12:06:10(இந்திய நேரம்)