தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.0 பாட முன்னுரை

  • 4.0 பாட முன்னுரை

    கவிதை, கல்வெட்டு, இசை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு துறைகளிலும் தம் முத்திரையைப் பதித்தவர் கவிமணி தேசிகவிநாயகம் அவர்கள். அவர் கவிதையை உயிராக நேசித்தவர். கவிமணியின் கவிதைகள் உணர்ச்சி நிறைந்தவை. ‘என் எழுத்தும் தெய்வம்; என் எழுதுகோலும் தெய்வம்’ என்று கூறிய பாரதியின் கவிதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் கவிமணி.

    “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
    பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
    கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! - அந்தக்
    கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.”

    என்ற பாடலைக் கவிமணி பாடியதன் மூலம் அவருக்குப் பாரதி மீதிருந்த மதிப்பை உணர்ந்து கொள்ளலாம். எளிமையாகப் பாடுபவர்; இனிமையாகப் பாடுபவர். குழந்தைகளுடன் குழந்தையாக வாழ்ந்தவர். பழமையின் பாதுகாப்பில் புதுமைக்குப் பாலம் அமைத்தவர். இத்தகைய சிறப்புடைய கவிமணியின் உள்ளத்தை இனிக் காணலாமா?

புதுப்பிக்கபட்ட நாள் : 11-11-2017 17:07:55(இந்திய நேரம்)