தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.4 தொகுப்புரை

  • 4.4 தொகுப்புரை

    கவிமணி மொழிப்பற்று மிக்கவர். தமிழ் மொழியில் பல நூல்களைப் படைத்தவர். தமிழ் நூல்கள் பலவும் படித்தவர். படித்தது மட்டுமன்றி நூல்களைப் பாராட்டவும் செய்தார்.

    கவிதை என்பது உள்ளத்தின் ஆழத்தில் தோன்றும் ஊற்று. அதன் பெருமையை உணரவேண்டும். கவிமணி இதை உணர்ந்து கூறினார். குழந்தைகளுக்காகக் கவிதைகளை இசைத்தார்.

    சமுதாய ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டுமென்று பாடினார். பிறமொழி நூல்கள் சிலவற்றை எளிய, இனிய தமிழில் மொழிபெயர்த்தார்.

    தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாடினார். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ்க்கவிஞர்களிடையே கவிமணிக்கு ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1)
    குழந்தைக் கவிஞர் எனப் பெயர்வரக் காரணம் யாது?
    2)
    கவிமணியின் கவிதைகளில் கதைகூறல் மரபு எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
    3)
    கவிமணியின் தேசியப்பற்றிற்கு முன்னோடி யார்?
    4)
    கவிமணியைப் படிப்பதன் மூலம் அடையும் உணர்வு எத்தகையது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 12:44:44(இந்திய நேரம்)