Primary tabs
-
1)குழந்தைக் கவிஞர் எனப் பெயர்வரக் காரணம் யாது?
குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்களில் ஆழமான உணர்ச்சி தேவையில்லை. எதுகை, மோனையோடு எளிய நடையில் எழுதுவது இனிமை. குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும்படியான பாடல்கள் எழுதினால் எளிமையாகவும், இனிமையாகவும் மனத்தில் பதிய வைத்துக் கொள்வார்கள். இந்தச் சிந்தனைகளின் பின்னணியில் குழந்தைகளுக்காகப் பாடியவர். அதனால் குழந்தைக் கவிஞர் எனப் பெயர் பெற்றார்.