தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.4 சமூக உணர்வு

  • நாமக்கல் கவிஞர் காந்தியம், தேசியம், தமிழுணர்வு பற்றியும் தமிழன் குறித்தும் ஏராளமான பாடல்கள் பாடியதிலிருந்து அவருடைய காலத்தின் தேவையை அறியமுடிகிறது.

    இனி, அவர் சமூகம் சார்ந்து சிந்தித்திருப்பதைப் பார்க்கலாம்.

    புதிய சமுதாயம் என்ற தலைப்பில்,

    பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
    பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்

    என்று பாடுகின்றார்.

    ஏழை என்றும் பணக்காரன் என்றும் பிரித்துக் காண்பதையும் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறார்.

    ஏனைய நாடுகளைக் காட்டிலும், தமிழ்நாட்டில்தான் பெண்கள் இறை நம்பிக்கையோடும், பாவ புண்ணியங்களிலும் விரதங்களிலும் நம்பிக்கையோடும் வாழ்ந்து வருகின்றனர்.

    o அன்பும் ஆர்வமும் உடையவர்கள் பெண்கள்.
    o அடக்கம், உண்மை, உறுதி நிறைந்தவர்கள்.
    o தன்னல மறுப்பு உடையவர்கள்.
    o சகிப்புத் தன்மையுடையவர்கள்.
    o தாயாய் நின்று தரணி காப்பவர்கள்.
    o தாரமாய் நின்று தளர்வு நீக்குபவர்கள்.

    எனப் பெண்ணின் பெருமை பேசுகின்றார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 12:31:23(இந்திய நேரம்)