Primary tabs
- 5.5 தொகுப்புரை
நாமக்கல் கவிஞர் எளிய கவிஞர். ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர். கவிதை உலகில் முத்திரை பதித்தவர். அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தவர். ஓவியம் வரைவதில் சிறந்தவர். காந்தியக் கொள்கையாளர். தேசியம் போற்றியவர். விடுதலை வேட்கையாளர். தமிழ்ப்பற்றாளர். தமிழன் எனும் உணர்வுடைவர். சமூகச் சிந்தனையாளர். பெண்ணின் பெருமை பேசியவர் என்ற செய்திகளையெல்லாம் நாமக்கல் கவிஞர் கவிதையிலிருந்தும் வாழ்க்கையிலிருந்தும், காங்கிரசு இயக்க ஈடுபாட்டிலிருந்தும் உணர்ந்து கொள்ள முடிகின்றதல்லவா?