தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை

    நண்பர்களே ! இதுவரை முடியரசன் என்னும் மூத்த தமிழ்க் கவிஞரின் கவிதைகள் பற்றியும் அவரது படைப்புலகம் பற்றியும் சில செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.

    இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    முடியரசன் என்னும் கவிஞரைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

    தாய்மொழிப் பற்றுக் குறைந்திருந்த தமிழகத்தில், காலத்தின் குரலாக அவர் மொழியுணர்ச்சி பற்றி மிகுதியாகப் பாடினார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

    உழைப்பின் உயர்வை அவர் போற்றுகிறார் என்று அறிய முடிந்தது.

    சமுதாயத்தில் இருக்கும் சாதிக் கொடுமைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் எதிர்த்துப் புரட்சிக்குரல் எழுப்பியதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

    காதல், அன்பு, பெரியோரைப் போற்றல் போன்ற மனிதப் பண்பின் உயர்வுகள் முடியரசன் கவிதைகளில் சிறப்பிடம் பெறுவதை அறிய முடிந்தது.

    கற்பனை வளமும்; உவமை, உருவக நலமும் அவர் கவிதைகளில் இருப்பதைக் காண முடிந்தது.

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II
    1)
    ‘கவிதைப்பெண்’ புதுமாலைப் பொழுதாக வந்து கவிஞருடன் எப்படி விளையாடுவாள்?
    2)
    ‘புதுமைப்பெண்’ எதை எதிர்க்கிறாள்? எதை ஏற்கிறாள்?
    3)
    கவிஞர் முடியரசன் யாரிடம் தம் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்?
    4)
    தாம் விரும்பும் ‘இறப்பு’ எந்த உருவில் வர வேண்டும் என்று முடியரசன் அழைக்கிறார்?
    நூல் பட்டியல்
    1. முடியரசன் கவிதைகள் (1954) இரண்டாம் பதிப்பு, 1961.
    2. காவியப் பாவை (1960)
    3. வீரகாவியம் (1966)
    4. கவியரங்கில் முடியரசன் (1964)
    5. பூங்கொடி (1964)

    வெளியீட்டாளர் :

    பாரி நிலையம்
    55, பிராட்வே (பிரகாசம் சாலை)
    சென்னை - 600 001

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 11:07:56(இந்திய நேரம்)