தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • 3.0 பாட முன்னுரை

    மொழிபெயர்ப்புப் பணி ஒரு பயனுள்ள பணி. இன்றைய நடைமுறை வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்ட பணி. இதழியல், வானொலி, தொலைக்காட்சி என்ற மக்கள் தொடர்பு ஊடகங்களில் மேலாதிக்கம் பெற்ற முதற்பணி இந்த மொழி பெயர்ப்புப் பணிதான் என்றால் அது மிகையாகாது. ஆட்சித்துறை, விளம்பரத்துறை போன்ற மக்கள் வாழ்வியல் கூறுகளிலும் மூச்சுக்காற்றுப் போல் முன்னுரிமை பெற்ற பணி இது.

    மும்மொழி ஆட்சிமுறை உள்ள நம் இந்திய நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றில் ஆட்சி நடவடிக்கைகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும் நிலையினையும் இன்று நாம் காணுகின்றோம். பிறமொழிகளில் சிறப்பிடம் பெறும் சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், புதினங்கள், கவிதைகள், திறனாய்வுகள், வரலாற்று நூல்கள் போன்றவை மொழியாக்கம் செய்யப்படும்போது அது மொழியாக்கம் பெற்ற மொழிக்கு ஒரு புதுவரவாக அமையும். மொழி பெயர்ப்பில் மூலமொழியைத் தருமொழி என்றும், பெயர்க்கப்படும் மொழியைப் பெறுமொழி என்றும் குறிப்பிடுவார்கள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:32:49(இந்திய நேரம்)