தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.7 தொகுப்புரை

    பொதுவாக மொழிபெயர்ப்பாளரின் தகுதிகள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் முதலியன முதல்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

    இரண்டாம் பகுதியில், இலக்கிய மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்கும் வழிமுறைகளையும் காணலாம். சொல்லும் பொருளும், பழமொழி, மரபுச் சொற்கள், வழக்குச் சொற்கள், பொருள்கோள், விடுகதைகள், சிலேடை, தொடைநயம் உறவுமுறைச் சொற்கள், பெயர்ச்சொல், இரட்டைக் கிளவிகள், அடுக்குத்தொடர்கள், குறிப்புப் பொருள், கலைச்சொற்கள் முதலியன இலக்கியத்தில் கையாளப்படுகின்றன. அவற்றை மற்றொரு மொழியில் பெயர்க்கும்போது மொழிபெயர்ப்பாளர்கள் அடைகின்ற சிக்கல்கள் ஆகியவற்றை இவ்விரண்டாம்பகுதி குறிப்பிட்டுள்ளது.

    மூன்றாம் பகுதி அறிவியல் மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், அறிவியல் மொழிபெயர்ப்புக்கான காரணங்கள், நிகர்ச் சொற்கள், பொருள் நிகரன்கள் முதலியவற்றைக் குறிப்பிடுகிறது.

    நான்காம் பகுதி சட்டத்துறை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் பற்றிக் கூறுகிறது.

    ஐந்தாம் பகுதி இதழியல் துறையில் ஏற்படும் சிக்கல்களைப் பட்டியலிடுகிறது.

    ஆறாம் பகுதியான ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள், பயனிலைகளை மொழிபெயர்த்தல், செயப்பாட்டுவினை முதலிய பலவற்றைத் தெளிவுபடுத்துகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    எத்தகைய துறைகளில் இலக்கிய மொழிபெயர்ப்பைப்போல, மொழி நயத்திற்கும், உணர்ச்சிக்கும் இடமில்லை?
    2.
    கலைச்சொற்களைத் தரப்படுத்தும்பொழுது எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்?
    3.
    செய்தித்தாள்களின் மொழிபெயர்ப்பு எத்தகையது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 19:12:02(இந்திய நேரம்)