Primary tabs
பாடம் - 5
P20125 மொழிபெயர்ப்பும் விளைவுகளும்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
•மொழிபெயர்ப்புகளால் இலக்கியத்துறையில் புதிய புதிய இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமான சூழலை இந்தப் பாடம் விளக்குகிறது.•தமிழக மக்களாட்சிச் சூழலில் உருவான கட்சிகள் தங்கள் கொள்கைகளுக்கும் வலிமை சேர்க்கும் வகையில் மொழிபெயர்ப்புகள் பயன்பட்டுள்ள தன்மையை அறியலாம்.•இலக்கிய ஆய்வுச் சூழலில் தற்கால ஆய்வுகளுக்குக் காரணமான அணுகுமுறைகளான அமைப்பியல், பின் அமைப்பியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற அயல்நாட்டுச் சிந்தனைகளைப் பயன்படுத்த மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை அறிய முடியும்.•தமிழகக் கல்விச் சூழலில் அறிவியல் கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயன்பட்டன; தற்காலத்தில் அறிவியல் ஆய்வுகளுக்கு மொழிபெயர்ப்புகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதை அறியலாம்.•பாமர மக்கள் சட்டம், ஆட்சி போன்ற துறைகளோடு நெருங்குவதற்கு மொழிபெயர்ப்புகள் பயன்படும் வகையை அறியலாம்.•இதழியல் துறையும் இலக்கிய மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் சிற்றிதழ்களும் செய்தி மொழிபெயர்ப்பால் அடையும் பயன்களை அறியலாம்.
