Primary tabs
5.7 தொகுப்புரை
தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு என்பது புதுமையான வரவு அல்ல என்றாலும் கருத்தாக்கப் புதுமைகள் மொழிபெயர்ப்பால்தான் ஏற்பட்டன.
•புதிய புதிய இலக்கிய வடிவங்கள், வகைகள், பாடுபொருள் முதலியன தோன்றியது மொழிபெயர்ப்பினால் ஆகும்.•தொடக்கத்திலிருந்து தொடர்ந்து வரும் மொழிபெயர்ப்பினால் அறிவியலின் இன்றைய வளர்ச்சியையும் எளிய மக்கள் அறிந்து பயன்படுத்த முடிகிறது.•சட்டங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனவே எளிதாக எல்லாரும் நீதிமன்றங்களை அணுக ஏதுவாக அமைந்தது.•ஆட்சித்துறையில் நெடுங்காலம் ஆங்கிலம் ஆட்சி செய்தது. எனவே, அரசுக்கும் மக்களுக்கும் இடைவெளி பெருகியது. அதனை மொழிபெயர்ப்புகள் குறைத்தன.•செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு இதழ்கள் செயலாற்றுகின்றன. அவற்றில் பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.